அண்ணாதுரை பிறந்தநாள் விழா
திருப்புத்துார்: திருப்புத்துாரில் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை பிறந்த நாளை முன்னிட்டு, அமைச்சர் பெரியகருப்பன் அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல், பேரூர் செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் கோகிலாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். * அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு சார்பில் நகர் செயலாளர் முருகேசன் தலைமையில் அண்ணாத்துரை சிலைக்கு மாலை அணிவித்தனர். ஒன்றிய செயலாளர்கள் கணேசன், நாகராஜன், தேவேந்திரன், உதயகுமார், மாவட்ட பொருளாளர் சுப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். * இளையான்குடியில் வடக்கு ஒன்றிய, நகர தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தடியமங்கலம், முடவேலி, தாயமங்கலம், காரைக்குளம், செந்தமிழ் நகர், கண்ணமங்கலம், இளையான்குடியில் கொடியேற்று விழா நடந்தது. மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் மதியரசன், நகர் செயலாளர் நஜூமுதீன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து, பேரூராட்சி துணை தலைவர் இப்ராகிம், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கி.கண்ணன், ஒன்றிய துணை செயலாளர் கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.