உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ராணுவத்தில் அக்னி வீரர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ராணுவத்தில் அக்னி வீரர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை : இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீரர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இத்தேர்விற்கு திருமணம் ஆகாத ஆண், பெண் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு ஆன்லைன் மூலம் அக்., 18 அன்று நடக்கும். இத்தேர்வில் பங்கேற்க ஜூலை 28 அன்று இரவு 11:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.இதற்கான தேர்வு கட்டணம் ரூ.550 மற்றும் ஜி.எஸ்.டி.,. இதற்கு விண்ணப்பிக்க 2004 ஜூலை 3 அல்லது அதற்கு பின் பிறந்தவர்கள் மற்றும் 2008 ஜன., 3 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இத்தேர்விற்கான கல்வி, உடற்தகுதி விபரத்தை www.agnipathyvayu.cdac.inஇணையதளத்தில் அறிந்து, ஜூலை 28 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை