பள்ளியில் விழிப்புணர்வு
சிவகங்கை : சிவகங்கை கற்பூர சுந்தரபாண்டியன் ராமலெட்சுமி மேனிலைப்பள்ளியில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. எஸ்.ஐ., தமிழ்ச்செல்வி தலைமை வகித்து மாணவர்களுக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.ஆசிரியர் இளங்கோ வரவேற்றார். சிறப்பு எஸ்.ஐ.,கள் வளர்மதி, பிரேமலதா, ஆசிரியர்கள் முத்துச்சாமி, சதீஸ் கலந்துகொண்டனர். மாணவர்கள் போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.