உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பேரூராட்சியில் பஸ் நிலையத்தில் இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ் ரூபாய் 49 லட்சம் மதிப்பில் பயணிகளுக்கு நிழற் கூரை மற்றும் கிளை நுாலக வளாகத்தில் ரூ.22 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து தலைமை வகித்தார். துணைத் தலைவர் செந்தில், செயல் அலுவலர் சண்முகம் முன்னிலை வகித்தனர்.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பூமணி, துணை செயலாளர் சேகர், தொழிலதிபர் மணி, கவுன்சிலர்கள் திவ்யா பிரேம்குமார், அலாவுதீன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !