உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ந.வைரவன்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம்

ந.வைரவன்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம்

திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே ந.வைரவன்பட்டி வயிரவசுவாமி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 57 வண்டிகள் பங்கேற்றன.சின்ன மாடு பிரிவில் 35 வண்டிகள் பங்கேற்றதால் இருபிரிவுகளாக நடத்தப்பட்டன.அதில் முதல் பிரிவில் வைரவன்பட்டி ஆண்டியப்பன், நெற்புகாப்பட்டி சதீஸ்குமார்,வைரவன்பட்டி ஜெயலெட்சுமி, காரைக்குடி சிவா முதல் நான்கு இடங்களையும், இரண்டாம் பிரிவில் மேலச்செவனுார் சத்தியமூர்த்தி, வைரவன்பட்டி காசி அம்பலம்,நெய்வாசல் பெரியசாமி, வெள்ளநாயக்கன்பட்டி சீமான் ஆகியோர் முதல் நான்கு இடங்களையும் வென்றனர்.நடுமாடு பிரிவில் 15 வண்டிகள் பங்கேற்றன முதல் நான்கு இடங்களை குப்பச்சிப்பட்டி வைரம், பாதரக்குடி அழகப்பன், அவனியாபுரம் முருகன்நகைக் கடை, காரைக்குடி சிவா வென்றனர்.பெரியமாடு பிரிவில் 7 வண்டிகள் பங்கேற்றன. முதல் நான்கு இடங்களை நெற்புகாப்பட்டி சதீஸ்குமார், வெட்டுக்காடு இன்ஜினீயர், கண்டனிப்பட்டி ராஜகண்ணப்பன், ஜெய்ஹிந்த் புரம் அக்கினிமுருகன் ஆகியோர் வென்றனர். போட்டியில் வென்ற மாடு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்