மாட்டு வண்டி பந்தயம்
சிவகங்கை ; காளையார்கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது. பெரிய, சின்னமாடுகளுக்கு இரு பிரிவாக பந்தயம் நடந்தது. பெரிய மாடு பிரிவில் 11, சிறிய மாடு பிரிவில் 17 ஜோடிகள் பங்கேற்றன. பெரிய மாட்டிற்கு 8, சிறிய மாட்டிற்கு 6 கி.மீ., துார எல்கை நிர்ணயித்தனர். வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.