உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடியில் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்த பஸ்

கீழடியில் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்த பஸ்

கீழடி: கீழடியில் இருந்து மதுரை மாவட்டம் திருமங்கலம் வரை அரசு டவுன் பஸ்சை எம்.எல்.ஏ., தமிழரசி தொடங்கி வைத்து ஒரு வாரமான நிலையில் நேற்று டவுன் பஸ் பழுதாகி பிரேக் பிடிக்காமல் சாலையோரம் உள்ள டூவீலர் மீது மோதி நின்றது. கீழடியில் இருந்து கொந்தகை, பொட்டப்பாளையம், சோளங்குருணி வழியாக மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு டவுன் பஸ் போக்குவரத்தை பிப்.24ம் தேதி எம்.எல்.ஏ., தமிழரசி, திருமங்கலம் அரசு பஸ் டெப்போ கிளை மேலாளர் முத்துமணி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். தினசரி காலை மற்றும் மாலை என இருவேளை மட்டும் டவுன் பஸ் கீழடியில் இருந்து திருமங்கலம் வரை சென்று திரும்பும் என அறிவிக்கப்பட்டது. நேற்று காலை எட்டு மணிக்கு கீழடி வந்த பஸ் பழுதாகி நின்றது. பணிமனையில் இருந்து ஊழியர்கள் சரிசெய்ய முயன்றும் முடியவில்லை. இதனையடுத்து அருங்காட்சியகத்திற்கு வந்த வாகன டிரைவர்கள், கீழடி பள்ளி மாணவர்கள் என அனைவரும் இணைந்து டவுன் பஸ்சை முன்னும் பின்னும் தள்ளி ஸ்டார்ட் செய்ய முயன்றனர்.பஸ்சில் பிரேக் பிடிக்காததால் நான்கு ஊழியர்கள் டயர்களை சுற்றிலும் முண்டுக்கற்கள், பேவர் பிளாக் கற்களுடன் தயாராக நின்றனர். பஸ்சை தள்ளிய போது ஸ்டார்ட் ஆகாததுடன் பஸ் சரிவில் இறங்கியது. தயாராக நின்ற ஊழியர்கள் கற்களை போட்டும் டவுன் பஸ் அதில் ஏறி அருங்காட்சியகத்திற்கு வந்திருந்தவர்கள் நிறுத்திய டூவீலர்கள் மீது மோதி சேதப்படுத்தியது.பொதுமக்கள் கூறுகையில்: அன்றாடம் கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வருகிறோம், டவுன்பஸ் இயக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்தோம், ஆனால் ஒரே வாரத்தில் பிரேக் பிடிக்காமல் பஸ்சில் பயணம் செய்பவர்கள் மட்டுமன்றி, சாலையில் செல்பவர்களும் அச்சத்தில் செல்லும் அளவிற்கு டவுன் பஸ் உள்ளது. இந்த பஸ் மட்டுமல்ல நகரில் இயக்கப்படும் பல டவுன் பஸ்கள் உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளன. நேற்று காலை திருமங்கலம் செல்வதற்காக காத்து கிடந்த பலரும் வேறு வழியின்றி ஆட்டோ பிடித்து சென்றனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை