உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோவிலுாரில் குறுவட்ட தடகள போட்டி

கோவிலுாரில் குறுவட்ட தடகள போட்டி

காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள கோவிலுார் ஆண்டவர் உடற்கல்வியியல் கல்லுாரியில் திருப்புத்துார் குறு வட்ட அளவிலான தடகளப் போட்டி நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். கோவிலுார் ஆண்டவர் மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், தொடர் ஓட்ட போட்டி , மும்முறை தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், பயிற்சி ஆசிரியர்களையும் கோவிலுார் ஆதீனம் நாராயண ஞான தேசிக சுவாமிகள், பள்ளித் தாளாளர் வீரப்பன் முதல்வர் மணிமொழி மோகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ