உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சதுர்வேதமங்கலத்தில் நாளை தேரோட்டம்

சதுர்வேதமங்கலத்தில் நாளை தேரோட்டம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ஆத்ம நாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயிலில் நாளை மாசித் தேரோட்டம் நடக்கிறதுகுன்றக்குடி ஆதினத்துக்கு உட்பட்ட, இக்கோயிலில் மாசித் திருவிழா மார்ச் 3ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் திருவிழாவாக தினமும் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். மார்ச் 8ம் தேதி இரவு கழுவன் திருவிழா நடந்தது. சமணர்களை கழுவேற்றிய சம்பவத்தை நினைவு கூறும் வகையில் நடத்தப்பட்ட இத்திருவிழாவில் கழுவன் வேடமிட்டவர் ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு அவருக்கு சுவாமி காட்சியளித்து அருள் பாலித்தார் கழுவனுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து கழுவன் விரட்டு நடந்தது. இளைஞர்கள் கழுவனை விரட்டி மகிழ்ந்தனர். நாளை (மார்ச் 11) இக்கோயிலின் மாசித் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதினம் மற்றும் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி