உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெண்ணிடம் மோசடி: சேலம் இளைஞர் கைது

பெண்ணிடம் மோசடி: சேலம் இளைஞர் கைது

சிவகங்கை: வல்லனேரி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகப்பிரியா 23. ஆன்லைனில் வேலை தேடியுள்ளார். ஆன்லைனில் சேலம் மாவட்டம் முருங்கைப்பட்டி காரதோப்பு ராகுல் 33 அறிமுகம் கிடைத்துள்ளது. ராகுல் ஜிபே மூலம் ஆன்லைனில் முதலீடு செய்தால் முதலீடு பணத்திற்கு 10 சதவீதம் லாபம் தருவதாக கூறியுள்ளார். அதை நம்பிய சண்முகப்பிரியா அவர் கூறிய ஜிபே எண்ணிற்கு 3 தவணைகளில் ரூ.17 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். பணத்தைப் பெற்ற ராகுல் லாபத்தையும் கொடுக்கவில்லை. முதலீடு பணத்தையும் திருப்பித்தரவில்லை. ஏமாற்றம் அடைந்த சண்முகப்பிரியா சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் ராகுலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்