உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிறுமி பலாத்காரம்; இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

சிறுமி பலாத்காரம்; இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திராணி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் 32. கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 2017ம் ஆண்டு காளையார்கோவிலை அடுத்துள்ள ஒத்த புஞ்சை என்ற கிராமத்தில் கட்டட வேலைக்கு சென்றார். அங்கு 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் பெற்றோர் சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த பொறுப்பு நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட செந்திலுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ