மேலும் செய்திகள்
செப். 5 ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்
02-Sep-2024
சிவகங்கை: ரேஷன் கடைகளில் சரியான எடையில் பொட்டலமாக பொருட்களை வழங்க வலியுறுத்தி நேற்று சிவகங்கை மாவட்டத்தில் 600 ரேஷன் கடைகளை அடைத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.மாவட்ட அளவில் நுகர்பொருள் வாணிப கழகம், தொடக்க கூட்டுறவு கடன் சங்கம், மாவட்ட மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் 830 ரேஷன் கடைகள் மூலம் கார்டுதாரர்களுக்கு பொருட்களை வினியோகம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர், அரசிடம் கடைகளுக்கு வழங்கும் பொருட்களை சரியான எடையில், பொட்டலமாக வழங்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு பொருட்களை இறக்கும் போது, விற்பனையாளர்களிடம் இறக்கு கூலி கேட்பதை தவிர்க்க வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கடைகளை அடைத்து, ஸ்டிரைக்கில் ஈடுபடுவதென முடிவு செய்தனர். மாவட்டத்தில் உள்ள 830 ரேஷன் கடைகளில், 600 ரேஷன் கடைகளை பூட்டி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சங்க மாநில பொது செயலாளர் கே.ஆர்., விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மாயாண்டி வரவேற்றார். மாவட்ட செயலாளர் திருஞானம் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் கவுரி நன்றி கூறினார். மாவட்ட நிர்வாகிகள் காண்டீபன், தஸ்லிமா, வசந்தி பங்கேற்றனர்.
கூட்டுறவு துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: முழு நேர, பகுதிநேர கடைகள் என நேற்று முறைப்படி தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் உள்ள 547 ரேஷன் கடைகளில், 428ல் விற்பனை நடந்த நிலையில், 119 கடைகள் பூட்டிய நிலையில் 139 விற்பனையாளர் பணிக்கு வரவில்லை, என்றனர்.
02-Sep-2024