மேலும் செய்திகள்
ஒன்றிய, நகர தி.மு.க., கூட்டம்
31-Aug-2024
சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் சுற்று வட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் சாலை கிராமத்தில் நடைபெற்றது. எம். எல். ஏ., தமிழரசி கர்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளையும் வழங்கினார். முன்னதாக ஆழிமதுரை கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மரையும், சாலைக்கிராமத்தில் பல்நோக்கு அரங்கத்தையும் திறந்து வைத்தார். முன்னாள் எம் எல்.ஏ.,மதியரசன்,ஒன்றிய செயலாளர்கள் தமிழ்மாறன், செல்வராசன், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வி, மலையரசி கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், சாலைக்கிராமம் ஊராட்சி தலைவர் தங்கம், தாசில்தார் முருகன், பி.டி.ஓ., விஜயகுமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிகண்டன், கனிமொழி, அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
31-Aug-2024