மேலும் செய்திகள்
டூவீலர் திருடிய 2 பேர் கைது11 வாகனங்கள் மீட்பு
19-Feb-2025
திருப்புத்துார்; மதுரை மேலுார் அருகே சின்னக்கருப்பூரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகு மகன் தெய்வேந்திரன்22. சென்ட்ரிங் தொழிலாளியான இவர் தேவகோட்டையில் தங்கி வேலை பார்த்து வந்தார். சிவராத்திரியை முன்னிட்டு ஊருக்கு டூ வீலரில் காரைக்குடி ரோட்டில் வந்தார்.தென்கரை அருகே வந்த போது எதிரே தென்கரைக்கு திரும்பிய டூ வீலர் மோதியதில் கீழே விழுந்தார். அப்போது மதுரை சொக்கலிங்கபுரத்திலிருந்து தேவகோட்டை வந்த சரக்கு வேன் தெய்வேந்திரன் தலை மீதுஏறியது. அதில் தலை நசுங்கி தெய்வேந்திரன் இறந்தார். நாச்சியாபுரம் எஸ்.ஐ.,குமரவேல் விசாரிக்கின்றார்.
19-Feb-2025