உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நுகர்பொருள் வணிப கழக தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

நுகர்பொருள் வணிப கழக தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை:தமிழகத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலைய ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சிவகங்கையில் நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தர ஊழியர் எண்ணிக்கை குறைப்பை கைவிட வேண்டும். பணி நிரந்தரம், பதவி உயர்வில் உள்ள குளறுபடியை நீக்க வேண்டும்.ஊழியர்களுக்கு பென்ஷன் ரூ.9000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று சிவகங்கை நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல தலைவர் கே.செல்வன் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில பொது செயலாளர் புவனேஸ்வரன், சிவகங்கை சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சேதுராமன் பங்கேற்றனர். மண்டல பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை