ஆபத்தான அண்டக்குடி அங்கன்வாடி மையம்
இளையான்குடி: இளையான்குடி அருகே அண்டக்குடி புதுாரில் ஆபத்தான,அடிப்படை வசதி இல்லாமல் இயங்கும் அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.இம்மையத்தில் தற்போது 15 குழந்தைகள் படித்து வரும் நிலையில் இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. மையத்திற்கு பின்புறம் தண்ணீர் நிரம்பிய குளம் தடுப்பு இல்லாமல் உள்ளது. போதிய பாதுகாப்பு இல்லாமல் மையம் செயல்பட்டு வருவதால் குழந்தைகளை மையத்திற்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.