மாற்றுத்திறனாளி உரிமை திட்ட முகாம்
சிவகங்கை: சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் குறித்த விளக்க முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.02 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளி மாவட்ட அலுவலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, தமிழரசி முன்னிலை வகித்தனர். சிவகங்கை நகராட்சி துணை தலைவர் கார்கண்ணன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் பங்கேற்றனர்.2022ம் ஆண்டில் பதிவு செய்து காத்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள் உட்பட 13 பயனாளிகளுக்கு ரூ.5.02 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.