உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் மார்ச் 15ல்வேலைவாய்ப்பு முகாம் 

சிவகங்கையில் மார்ச் 15ல்வேலைவாய்ப்பு முகாம் 

சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் மார்ச் 15 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது,வேலைவாய்ப்பு முகாம் அன்று காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெறும். இதில், 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் 5,000 காலிபணியிடத்திற்கு இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில், எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். இதில், பங்கேற்க விரும்புவோர் தன் சுயவிபரத்துடன், கல்வி சான்று, ஆதார் அட்டை நகலுடன் முகாமில் பங்கேற்கலாம். வேலை தேடுவோர் மற்றும் தனியார் நிறுவனங்கள் முகாமில் பங்கேற்க www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இம்மாவட்டத்தை சேர்ந்த வேலையில்லாத இளைஞர்கள் முகாமில் பங்கேற்று தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ