மேலும் செய்திகள்
ஆவின் ஊக்கத்தொகையை நேரடியாக வழங்க எதிர்ப்பு
22-Feb-2025
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் ஆவினிப்பட்டியில் ஆவினிக்கண்மாயில் நடந்த மீன்பிடித் திருவிழாவில் கிராமத்தினர் பங்கேற்றனர். ஆவினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆவினி கண்மாயில் நீர் வற்றத்துவங்கியதை அடுத்து கிராமத்தினர் மீன் பிடிக்க அறிவித்தனர். நேற்று காலை முதல் சுற்றுவட்டாரத்திலுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஊத்தா கூடை, கச்சா, கொசுவலை, அரிவலை உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களுடன் கண்மாயில் குவிந்தனர். கிராமத்தார்கள் வெள்ளைத்துண்டு வீசி அனுமதி அளித்தவுடன் ஊத்தா கூடையுடன் சென்று போட்டி போட்டு மீன்களை பிடித்தனர்.
22-Feb-2025