உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் மலர் சாகுபடி குறைந்தது

திருப்புவனத்தில் மலர் சாகுபடி குறைந்தது

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் ஆர்வம் இருந்தும் உரிய வழிகாட்டல் இல்லாததால் மலர் சாகுபடி விவசாயம் குறைந்து வருகிறது. வைகை பாசனத்தை நம்பி நெல், வாழை, கரும்பு உள்ளிட்டவை பயிரிட்டாலும் தினசரி வருவாயை கொடுக்க கூடிய மலர் சாகுபடியும் திருப்புவனம் வட்டாரத்தில் செய்யப்பட்டு வந்தது. சொந்த நிலம் தவிர நிலங்களை குத்தகைக்கு எடுத்தும் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். தவத்தாரேந்தல், பனையனேந்தல், லாடனேந்தல், அகரம், வில்லியரேந்தல், மணலுார் உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகை, பட்டு ரோஸ், இட்லி பூ, செவ்வந்தி, பிச்சிப் பூ உள்ளிட்ட மலர் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.சமீப காலமாக விவசாயிகள் மலர் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.தவத்தாரேந்தல் பகுதியில் விளையும் பட்டு ரோஸ், மல்லிகை பூ தினசரி மதுரை மார்க்கெட்டிற்கு அனுப்பப்பட்டு வந்தது. சமீப காலமாக மல்லிகை மட்டும் குறைந்த பரப்பளவில் பயிரிட்டு வருகின்றனர். நோய் தாக்குதல், மான்யம் குறித்து வேளாண் அதிகாரிகளிடம் கேட்டால் உரிய ஆலோசனை தருவதில்லை, மருந்தும் தருவதில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.மதுரை பூ மார்க்கெட்டிற்கு திருப்புவனம் வட்டாரத்தில் இருந்து அதிகளவு மல்லிகை பூ கொண்டு செல்லப்பட்டது. தற்போது மல்லிகை பூ விவசாயமே திருப்புவனம் வட்டாரத்தில் குறைந்து விட்டது. மல்லிகை பூ மட்டுமல்ல பட்டு ரோஸ், இட்லி பூ, செவ்வந்தி உள்ளிட்ட அனைத்து வகை மலர் சாகுபடியும் மாயமாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை