உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் கந்துாரி விழா

திருப்புத்துாரில் கந்துாரி விழா

திருப்புத்துார் : திருப்புத்துாரில் கான்மியான் வலியுல்லாஹ் தர்காவில் புஷ்ப வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக நடத்தப்படும் 85 ஆம் ஆண்டு கொடியேற்று விழா மற்றும் அனைத்து சமுதாய மக்களால் நடத்தப்படும் கந்துாரி விழா நடந்தது. நேற்று காலை துஆ பிரார்த்தனையுடன் துவங்கியது. மதியம் கந்துாரி விழா என்னும் அன்னதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சமத்துவ மற்றும் மத நல்லிணக்க நிகழ்வாக அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்றனர். மாலையில் சந்தன குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தர்கா நிர்வாகிகளால் புஷ்ப வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர். அடுத்து கொடியேற்றும் நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் சண்முக வடிவேல் கொடியேற்றினார். புஷ்ப வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பாண்டியன், செயலாளர் வசந்த சேனன், பொருளாளர் முபாரக் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தர்ஹா நிர்வாகிகள் அலாவுதீன், ஆலிம் அபுதாஹிர், அஸ்லம், யாசின் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை