உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரியில் விநாயகர் சிலை ஊர்வலம்

சிங்கம்புணரியில் விநாயகர் சிலை ஊர்வலம்

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 55 விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. சிங்கம்புணரியில் ஹிந்து முன்னணி சார்பில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. செப்.10ம் தேதி இரவு விநாயகர் ஊர்வலம் நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் 55 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.ஊர்வலத்திற்கு கிராம பிரமுகர் சத்தியசீலன் தலைமை வகித்தார். வீரமுத்தி அம்மன் கோயில் டிரஸ்டி பாபுஜி, தொழிலதிபர் அண்ணாமலை, கோசேவா அறங்காவலர் கே.ஆர்.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். பாரதிய மஸ்துார் சங்க மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் பேசினார்.ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கருணாகரன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பாலசுப்ரமணியன், குகன், மாவட்ட கோசேவா பொறுப்பாளர் தினேஷ் பொன்னையா, பா.ஜ., மாவட்ட பொருளாளர் கன்னையா, ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் தங்கப்பாண்டி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை