உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை: ஜூன் 13 வரை நீட்டிப்பு

அரசு ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை: ஜூன் 13 வரை நீட்டிப்பு

மானாமதுரை : மானாமதுரை அரசு ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு ஜூன் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மானாமதுரை அரசு ஐ.டி.ஐ.,யில் மோட்டார்மெக்கானிக்,சர்வேயர், எலக்ட்ரீசியன், ரெப்ரிஜிரேட்டர், ஏ.சி., மெக்கானிக் போன்ற தொழிற்பிரிவு 2 ஆண்டு படிப்புகளுக்கு 10வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.இவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகையாக ரூ.750, விலையில்லா சீருடைகள்,காலணிகள், பாடப்புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் மற்றும் பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் 6 முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்த மாணவியர்களுக்கு மட்டும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் கடந்த மே 10ம் தேதி துவங்கியது. மானாமதுரை ஐ.டி.ஐ., யில் நேரடி சேர்க்கையும் நடைபெறுகிறது. இந்நிலையில் மாணவர்சேர்க்கைக்கான இறுதி தேதி ஜூன் 7 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் வருகிற 13ம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் விரைந்து சேருமாறு முதல்வர் சேகர் தெரிவித்துஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை