உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மனைவிக்கு கத்திக்குத்து கணவர் தற்கொலை

மனைவிக்கு கத்திக்குத்து கணவர் தற்கொலை

காரைக்குடி, - காரைக்குடி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் 45. இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. வெளிநாட்டில் வேலை செய்த திருஞானசம்பந்தம் சில நாட்களுக்கு முன்னர் வீட்டிற்கு வந்துள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று, கணவன் மனைவி இடையே வாக்கு வாதம் முற்றியதில், திருஞானசம்பந்தன் மனைவி சரண்யாவை கத்தியால் குத்தினார். படுகாயம் அடைந்த சரண்யா புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விரக்தியில் இருந்த திருஞானசம்பந்தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். காரைக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை