வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வீராணம் குழாய் மாதிரி இருக்கே... பண்டைத்தமிழனுமா இப்புடி?
கீழடி : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்த பத்தாம் கட்ட அகழாய்வில் கிடைத்த சுடுமண் குழாய்களும், 7ம் கட்ட அகழாய்வில் கிடைத்த சுடுமண் குழாயும் ஒரே மாதிரியான அமைப்பை கொண்டவையாக உள்ளன.கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் பத்தாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. ஆறு குழாய்கள் இணைக்கப்பட்ட 174 செ.மீ., நீளம் கொண்ட வடிகால் சுடுமண் குழாய் போன்ற அமைப்பு சமீபத்தில் கண்டறியப்பட்டது. ஏழாம் கட்ட அகழாய்வு பணியின் போது அகரத்தில் இதே போன்ற குழாய் அமைப்பு சற்று சேதமடைந்த நிலையில் கண்டறியப்பட்டது.இதனால் கீழடி, அகரத்தில் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த மக்கள் வசித்திருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.அகரத்தில் இரண்டு குழாய்கள் மட்டுமே கண்டறியப்பட்ட நிலையில் மேலும் அகழாய்வில் ஈடுபட்டிருந்தால் கூடுதலாக குழாய்கள் கிடைத்திருக்கும் எனவும் கருதப்படுகிறது. சுடுமண் குழாய்கள் அனைத்தும் ஒரு புறம் குறுகியும் மறு புறம் அகலமாகவும் இருப்பதால் இணைப்பு குழாயாகவே பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது.சுடுமண் குழாய் அமைப்புகள் நீர் மேலாண்மையை பறைசாற்றும் வகையில் இருப்பதாக கருதப்பட்டாலும் தண்ணீர் கொண்டு செல்லத்தான் இக்குழாய்கள் பயன்பட்டதா என தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வீராணம் குழாய் மாதிரி இருக்கே... பண்டைத்தமிழனுமா இப்புடி?