உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிறுமிக்கு தொல்லை கொடுத்த முதியவருக்கு சிறை தண்டனை

சிறுமிக்கு தொல்லை கொடுத்த முதியவருக்கு சிறை தண்டனை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே அரண்மனை சிறுவயலைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 78. சமையல் மாஸ்டராக இருந்தார். கடந்த, 2018 மே 20 காலை 11:00 மணிக்கு, அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். தேவகோட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிந்தனர். சிவகங்கை போக்சோ நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன் வழக்கை விசாரித்து, ராஜேந்திரனுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !