உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயிகள் தனித்துவ அடையாள எண்  பெற மார்ச் 31க்குள் பதிவது அவசியம் 

விவசாயிகள் தனித்துவ அடையாள எண்  பெற மார்ச் 31க்குள் பதிவது அவசியம் 

சிவகங்கை : விவசாயிகள் மத்திய அரசு திட்டத்தில் பயன்பெற தனித்துவ 'அடையாள எண்' பெறுவதற்கான இணைய தளத்தில் மார்ச் 31 க்குள் பதிவு செய்யுமாறு சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் எஸ்.சுந்தரமகாலிங்கம் தெரிவித்தார்.தமிழகத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் ஒருங்கிணைந்த தரவு இணைதளம் மூலமாக உருவாக்கும் பணியை மத்திய, மாநில அரசு மேற்கொள்கிறது. இம்மாவட்டத்தில் வேளாண், தோட்டக்கலை, வேளாண் விற்பனை துறை, ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் சமுதாய வள நபர்கள் மற்றும் அனைத்து இ- சேவை மையங்கள் மூலம் விவசாயிகள் அடையாள எண் பெற விண்ணப்பிக்க வேண்டும். இம்மாவட்டத்தில் இது வரை 45,050 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். இன்னும் 1 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இதில் பதிவு செய்ய வேண்டும். மத்திய அரசின் திட்ட பயன்களை பெற விவசாயிகள் இணையதளத்தில் மார்ச் 31 க்குள் பதிவு செய்து பயன்பெறுங்கள். விவசாய நில உரிமையாளர் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆதார் அட்டை, பட்டா, சிட்டா அடங்கல், ஆதார் எண் இணைத்த அலைபேசியுடன் இணைக்க நோக்கில் கிராமங்கள் தோறும் முகாம்கள் நடத்தப்படுகிறது. இ- சேவை மையங்கள் மூலம் பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை அணுகலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை