ரூ.2,000 லஞ்சம் வாங்கிய கீழடி ஆர்.ஐ., சிக்கினார்
கீழடி:சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே பசியாபுரத்தைச் சேர்ந்த வசந்த் என்பவர், வாரிசு சான்றிதழ் கேட்டு இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தார். கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல் அளித்த நிலையில், வருவாய் ஆய்வாளர் முத்துமுருகன் 2,000 ரூபாய் கொடுத்தால் தான், சான்றித தர முடியும் என்றார். லஞ்சம் கொடுக்க விரும்பாத வசந்த், சிவகங்கை லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். நேற்று முன் தினம் காலை முத்துமுருகனிடம் பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்த போலீசார், அவரைப் லஞ்சப் பணத்துடன் கைது செய்தனர். மேலும், முத்துமுருகனின் மதுரை வீட்டிலும் சோதனை நடத்தினர்.