மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
15 hour(s) ago
பயிற்சி முகாம்
15 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
15 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
15 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
15 hour(s) ago
திருப்புத்துார் : திருப்புத்துார் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை.தற்போது அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறையினர் ' எண்ணும் எழுத்தும்' என்ற திட்டத்தின் கீழ் துவக்க வகுப்புகளுக்கு மட்டும் பயிற்சி புத்தகங்கள் வழங்குகின்றனர். இந்த புத்தகங்களைப் பயன்படுத்தியே ஆசிரியர்கள் பலரும் வகுப்பு எடுக்கின்றனர். அதன் அடிப்படையில் வினாத் தேர்வும் நடைபெறுகிறது.இந்நிலையில் வட்டார வளமையம் மூலம் அரசு பள்ளிகளுக்கு இந்த பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. போதிய அளவில் பயிற்சி புத்தகங்கள் வராததே காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சிக்கான வாய்ப்பு கிடைக்க வில்லை. பள்ளி திறந்து பல வாரங்களாகி விட்டதால் விரைவாக பயிற்சி புத்தகங்கள் அனைத்து துவக்க வகுப்பு மாணவர்களுக்கும் கிடைக்க கல்வித் துறையினர் நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரியுள்ளனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago