மேலும் செய்திகள்
பைக்கை திருடி சென்ற மர்ம நபர்
03-Feb-2025
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
20-Feb-2025
மானாமதுரை; மானாமதுரையில் இருந்து தாயமங்கலம் செல்லும் ரோட்டை நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்கின்றனர். தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனியில் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் பொங்கல் விழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தீச்சட்டி, கரும்பாலைதொட்டில்,முடி காணிக்கை செலுத்தி வேண்டுதல்களை நிறைவேற்றுவர். இன்னும் சில வாரங்களில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. பங்குனி 22ம் தேதி பொங்கல் விழா நடைபெற உள்ளது. மானாமதுரையில் இருந்து தாயமங்கலம் செல்லும் ரோடு ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டதால் சீரமைக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து ரோடு சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மானாமதுரை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முத்து ஈஸ்வரன்,உதவி பொறியாளர் ராமநாதன் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
03-Feb-2025
20-Feb-2025