உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோபாலபுரத்தில் மஞ்சுவிரட்டு

கோபாலபுரத்தில் மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கோபாலபுரத்தில் நடந்த மஞ்சுவிரட்டில் ஏராளமான காளைகள் பங்கேற்றன.பிரான்மலை கலியுக மெய் ஐயனார் கோயில் புரவியெடுப்பு விழாவை முன்னிட்டு கோபாலபுரம் கிராம மக்கள் சார்பில் அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. முதலில் கோயில் மாடுகளுக்கு வழிபாடு நடத்தி அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்தும் மற்ற மாடுகள் கட்டுமாடுகளாக ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டன.மாடுகளை வீரர்கள் அடக்க முயன்றனர். பெரும்பாலான மாடுகள் வீரர்களிடம் பிடிபடாமல் வெளியேறின. மாடுகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை