உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் 

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் 

சிவகங்கை: கல்லல் அரசு மகளிர் உயர்நிலை பள்ளி வளாகத்தில் இன்று (மார்ச் 1) காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெறும்.மார்ச் 3ம் தேதி சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில்18வயதுவரை உள்ள சிவகங்கை ஒன்றியத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெறும்.

மார்ச் 4ல் மருத்துவ முகாம்

இளையான்குடி புதுாரில் உள்ள கே.கே., இப்ராஹிம் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் 26ம் தேதி நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டு மார்ச் 4ம் தேதி காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.முகாமில் தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், உதவித்தொகை பெறுவதற்காக பதிவு செய்யப்படுகிறது. முகாமில் மனநலம்,குழந்தைகள், கண், காது, தொண்டை, மூக்கு, முட நீக்கியல் மருத்துவர்கள் பங்கேற்றனர். முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறன் மாணவர்கள் அடையாள அட்டை, ஆதார் அட்டை,குடும்ப அட்டை நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை