மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம்
01-Mar-2025
இளையான்குடி: இளையான்குடி புதுாரில் உள்ள கே.கே மேல்நிலைப் பள்ளியில் நாளை காலை 10:00 மணிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.முகாமில் தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், உதவித்தொகை, சலுகை கட்டண பஸ் பாஸ், பெறுவதற்கான பதிவு செய்யப்படுகிறது. முகாமில் மனநலம், குழந்தைகள் நலம், கண், காது, தொண்டை, மூக்கு, முட நீக்கியல் மருத்துவர்கள் பங்கேற்கின்றனர். முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறன் மாணவர்கள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.
01-Mar-2025