உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மெட்ரோவில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி

மெட்ரோவில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, தெற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் சுந்தரி, 52. இவர் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கட்டடத்தை வாங்க முயன்றார். அப்போது, அவருக்கு மஹாபிரபு என்பவரின் பழக்கம் கிடைத்தது.சுந்தரி மகன் ரஞ்சித்குமாருக்கு சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரியும் தன் நண்பர் வாயிலாக, சிவில் இன்ஜினியரிங் பிரிவில் வேலை வாங்கித் தருவதாக மஹாபிரபு உறுதியளித்தார். அதை நம்பி, சுந்தரி வங்கி கணக்கு வாயிலாக, 22 லட்சம், ரொக்கமாக, 3 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பின், ரஞ்சித்குமாரின் அசல் கல்வி சான்றிதழ்களையும் மஹாபிரபு வாங்கினார். சில மாதங்களுக்கு பின் மஹாபிரபு போலி அரசு பணி நியமன உத்தரவை சுந்தரியிடம் வழங்கினார்.சுந்தரி, சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் ஆவணத்தை சரிபார்த்தபோது, பணி உத்தரவு போலி என, தெரியவந்தது. பணத்தை திருப்பிக் கேட்ட சுந்தரியை, மஹாபிரபு மிரட்டினார். குற்றப்பிரிவு போலீசில் சுந்தரி அளித்த புகாரில், போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி