உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாயமான தேனாறு: விவசாயிகள் கோரிக்கை

மாயமான தேனாறு: விவசாயிகள் கோரிக்கை

காரைக்குடி : காரைக்குடி தேவகோட்டை ரஸ்தா பகுதியில், உள்ள தேனாற்றை மழைக்காலத்திற்கு முன்பு துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவிலுார் பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக தேனாறு விளங்கியது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆறு ஆத்தங்குடி கோடநாச்சி கண்மாயிலிருந்து, தேனாறாக தொடங்கி சின்னக் குன்றக்குடி அருகேயுள்ள கண்மாயை அடையும். தொடர்ந்து கோவிலுார் அருகே உள்ள கோனேரி கண்மாய்க்கு தண்ணீர் சென்றடையும். அங்கிருந்து இரண்டாகப் பிரிந்து அதலைக் கண்மாய் மற்றும் காரைக்குடி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும்.பின்னர் காரைக்குடி கண்மாயிலிருந்து செஞ்சை தேவகோட்டை ரஸ்தா வழியாக ஓடி, பாம்பாற்றை சென்றடையும். இவ்வாறான தேனாறு பல்வேறு கண்மாய்களின் நீர் ஆதாரமாக விளங்குவதோடு விவசாயத்தின் ஆதாரமாகவும் விளங்கியது. தேவகோட்டை ரஸ்தா அருகே 2 கி.மீ., துாரத்திற்கு இந்த தேனாறு முற்றிலும் புற்கள், கருவேல மரங்கள் வளர்ந்து ஆறு தெரியாத அளவிற்கு மாறிவிட்டது. மழைக்காலம் தொடங்கும் முன்பு தேனாற்றை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை