உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் வட மஞ்சு விரட்டு

திருப்புவனத்தில் வட மஞ்சு விரட்டு

திருப்புவனம் : திருப்புவனம் பழையூரில் வடமஞ்சுவிரட்டு நடந்தது. மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி துவக்கி வைத்தார். காலை 11:00 மணிக்கு துவங்கிய மஞ்சுவிரட்டு, மாலை 4 மணி வரை நீடித்தது. போட்டிகளில் பங்கேற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தினர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 12 காளைகள் பங்கேற்றன. ஒரு காளைக்கு 20 நிமிடம் வீதம் ஒன்பது வீரர்கள் அடக்க இறக்கிவிடப்பட்டனர். வெற்றி பெற்ற வீரர், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ