தேவகோட்டையில் ஓவிய போட்டி
தேவகோட்டை:ஹிரோசிமா, நாகசாகி தினத்தை முன்னிட்டு தேவகோட்டையில் 2,000 மாணவர்கள் பங்கேற்ற ஓவிய போட்டி நடைபெற்றது.நகராட்சி அரசு உயர்நிலை பள்ளியில் போட்டி நடத்தப்பட்டது. நண்பர்கள் நடையாளர் சங்க தலைவர் குமரப்பன் தலைமை வகித்தார். தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓவிய போட்டியில் பங்கேற்றனர்.