/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விளத்துார் இந்திரா நகர் குடியிருப்பில் கூரை இடிந்து விழுவதால் மக்கள் அச்சம்
விளத்துார் இந்திரா நகர் குடியிருப்பில் கூரை இடிந்து விழுவதால் மக்கள் அச்சம்
மானாமதுரை : மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விளத்துார் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் குடியிருப்பில் 1986ம் ஆண்டு 25 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது.இதில் ஏராளமானோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். வீடுகள் கட்டப்பட்டு 36 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் அனைத்து வீடுகளிலும் சிமென்ட் பூச்சு ஆங்காங்கே உதிர்ந்து கீழே விழுகின்றன.இந்த வீடுகளுக்கு இதுவரை பட்டா கொடுக்கப்படவில்லை. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆகவே அதிகாரிகள் மக்களின் நலன் கருதி விரைவில் வீட்டுமனை பட்டாவோடு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.