உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தண்ணீர், தெருவிளக்கு இல்லாமல் மக்கள் அவதி; இடையவலசை ஊராட்சியின் அவலம்

தண்ணீர், தெருவிளக்கு இல்லாமல் மக்கள் அவதி; இடையவலசை ஊராட்சியின் அவலம்

இளையான்குடி : இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இடைய வலசை ஊராட்சிக்குட்பட்ட காந்தி சாலை,இந்திரா நகர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வராததால் கிராம மக்கள் தண்ணீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.இளையான்குடி நகர்ப் பகுதியை ஒட்டியுள்ள இடைய வலசை ஊராட்சிக்குட்பட்ட காந்தி சாலை, இந்திரா நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் 1200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக ஆர்.எஸ்.மங்கலம் விலக்கு ரோட்டில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 10 நாட்கள் அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது குடிநீர் விநியோகம் முறையாக இல்லாததால் இப்பகுதி மக்கள் வண்டிகளில் வரும் குடிநீரை ஒரு குடம் ரூபாய் 15 கொடுத்து வாங்கி வருகின்றனர்.மக்களின் இதர தேவைக்கு ஊராட்சி சார்பில் வழங்கப்பட்ட தண்ணீரும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக விநியோகம் செய்யப்படவில்லை. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள தெரு விளக்குகள் எரியவில்லை.இந்திரா நகர் பெரியசாமி கூறியதாவது: இளையான்குடி நகர்ப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களான காந்தி சாலை, இந்திரா நகர் பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் மற்றும் புழக்கத்துக்குரிய தண்ணீர் ஒழுங்கான முறையில் விநியோகம் செய்யாத காரணத்தினால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் விலக்கு ரோடு அருகே எச்சரிக்கை பலகை இல்லாத நிலையில் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை