மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
18 hour(s) ago
பயிற்சி முகாம்
18 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
18 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
18 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
18 hour(s) ago
சிவகங்கை: சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது.ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் நகரில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் 8 நாட்கள் பூச்சொரிதல் விழா நடைபெறும். இந்த ஆண்டின் பூச்சொரிதல் விழா நாளை (ஜூலை 5) காலை 9:15 முதல் 10:15 மணிக்குள் பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு காப்பு கட்டி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.அன்று மாலை 6:00 மணிக்கு அம்மன் சன்னதி முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி செலுத்துவர். அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு காலையும், மாலையும் சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். எட்டாம் நாளான ஜூலை 12 அன்று காலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிேஷகமும்,சகல அபிேஷகம் நடைபெறும்.தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரத்தில் கையில் குழந்தையுடன் பிள்ளைவயல் காளி எழுந்தருள்வார். நகரின் முக்கிய இடங்களில் ஆடல்,பாடல் நிகழ்ச்சி நடைபெறும். ஜூலை 12 அன்று காலையில் இருந்து இரவு வரை பெண்கள் பூத்தட்டுக்களை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்து, அம்மனுக்கு அபிேஷகம் செய்வார்கள். செயல் அலுவலர் நாராயணி தலைமையில் ஏற்பாடுகளையும், பூஜைகளை சங்கு மணிகண்டன் பூஜாரியும் செய்து வருகின்றனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago