உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

வி.ஏ.ஓ.,விற்கு கத்தி குத்துசிவகங்கை: -சிவகங்கை அருகே வல்லனி பரமசிவம் மகன் சுரேஷ் 35. இவர் புதுப்பட்டி குரூப் வி.ஏ.ஓ.,வாக உள்ளார். நேற்று முன்தினம் மாலை பணி முடித்து வீட்டிற்கு சென்றார். அங்கு அஜித் 24 என்பவர், வி.ஏ.ஓ.,வின் வீட்டு கதவை உடைத்துள்ளார். இதை தட்டிக்கேட்ட வி.ஏ.ஓ.,வின் கையில் கத்தியால் குத்தினார். காயமுற்ற அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.நீரில் மூழ்கி வாலிபர் பலிகாரைக்குடி: -திண்டுக்கல் மாவட்டம் பூங்கிழவன்பட்டி ராஜேந்திரன் மகன் அசோக் 19. பிளஸ் 2 முடித்துள்ளார். மரம் வெட்டும் வேலைக்கு காரைக்குடி அருகே கோவிலுார் வந்திருந்தார். வேலையை முடித்துவிட்டு கோவிலுார் குளத்தில் குளித்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.ரேஷன் அரிசி கடத்தல்: டிரைவர் கைதுசிவகங்கை: சிவகங்கை குடிமைபொருள் கடத்தல் தடுப்பு குற்றபுலனாய்வு பிரிவு எஸ்.ஐ., சிவபிரகாசம் காரைக்குடி பைபாஸ்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சரக்கு வேனில் சோதனை செய்தபோது, கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி 38 மூடைகள் (1,520 கிலோ) இருப்பதை கண்டறிந்தனர். டிரைவர் காரைக்குடியை சேர்ந்த சுந்தரபாண்டியனை 36, கைது செய்து, சரவணன், செல்வம் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை