உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காளையார்கோவிலில் பானை குறியீடு, கீறல்கள், முனைக்கருவி கண்டெடுப்பு  

காளையார்கோவிலில் பானை குறியீடு, கீறல்கள், முனைக்கருவி கண்டெடுப்பு  

சிவகங்கை : காளையார் கோவில் பாண்டியன் கோட்டையில் பானை குறியீடுகள், கீறல்கள், எலும்பாலான முனைக்கருவி உள்ளிட்ட பொருட்கள் கண்டறிந்துள்ளனர்.சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா, தலைவர் சுந்தர்ராஜன், செயலாளர் நரசிம்மன் உள்ளிட்டோர் கள ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வின் மூலம் பாண்டியன் கோட்டையை சுற்றி அகழியுடனும் நடுவில் நீராவி குளத்துடனும் மண் மேடு 37 ஏக்கரில் காணப்படுகிறது. மேட்டுப்பகுதி முழுவதும் பானை ஓடுகள் பெருமளவில் கண்டறிந்தனர்.இங்கு வட்ட சில்லுகள், மேற்கூரை ஓட்டு எச்சங்கள், சங்ககால செங்கல் எச்சங்கள் கிடைத்துள்ளன.பானை ஓட்டுக்கிறல்கள், குறியீடுகள் கிடைத்ததோடு 2000 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்தில் 'மோசிதபன்' என்று எழுதப்பட்ட பானை ஓடும் கிடைத்தது. நெசவுக்கு அல்லது வேறொரு காரணத்திற்காக பயன்படுத்தப்பட்ட எலும்பாலான முனையுடைய கருவியும் கண்டறிந்தனர். இங்கு கண்டறிந்த பானை ஓடு குறியீடு கீறல்கள் முக்கோண, சதுர வடிவில் உள்ளன.எலும்பாலான கருவி முனையின் முனைப்பகுதி சற்று சேதமடைந்துள்ளது. இதே போன்ற எலும்பாலான கருவி முனை முன்பும் இங்கே கிடைத்துள்ளது. இவ்விடத்தின் பழமையை அறிந்து கொள்ள தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ