உள்ளூர் செய்திகள்

பிரதோஷ விழா

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் ஆனி பிரதோஷ விழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவர் சோமநாதர் சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலை சுற்றி 3 முறை வலம் வந்தனர். விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.* சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் நேற்று மாலை 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு அபிஷேகங்களும் சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது.பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயில், கரிசல்பட்டி கைலாசநாதர் கோயில், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை