உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி, இளையான்குடியில் மழை 

காரைக்குடி, இளையான்குடியில் மழை 

சிவகங்கை: மாவட்டத்தில் காரைக்குடி, இளையான்குடியில் அதிகபட்சமாக 40 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் ஆடி பட்டத்தில் தேடி விதைக்க மழையின்றி விவசாயிகள், நிலங்களை கோடை உழவு செய்து காத்திருந்தனர். தொடர்ந்து ஆடி 18 வரை மாவட்டத்தில் மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.மழை பெய்தால் மட்டுமே மானாவாரியாக நெல், பயிறு வகை, நிலக்கடலை நடவு செய்ய விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். ஆடி., 18 க்கு பின் தொடர்ந்து சில நாட்களாக மாவட்ட அளவில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழையை வைத்து விவசாயிகள் கோடை உழவு செய்து வைத்திருந்த நிலத்தில், நெல், நிலக்கடலை, பயிறு வகைகளை நடவு செய்யும் பணிகளை துவக்கியுள்ளனர்.காரைக்குடியில் 40 மி.மீ., மழை: மழை அளவு (மி.மீ.,) சிவகங்கை - 3.0, இளையான்குடி - 40, திருப்புவனம் - 2.40, திருப்புத்துார் - 8.0, காரைக்குடி - 40, தேவகோட்டை - 9.60, சிங்கம்புணரி - 5 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ