உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நாளை ரேஷன் குறைதீர் கூட்டம் 

நாளை ரேஷன் குறைதீர் கூட்டம் 

சிவகங்கை: அனைத்து வட்ட அலுவலகங்களில் நாளை (ஆக., 10) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார். இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, அலை பேசி எண் மாற்றம் செய்தல், பொது வினியோக திட்டத்தின் செயல்பாடு குறித்து புகார் செய்யலாம். அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் இயங்கும் வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ