உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரியில் வட்டார விளையாட்டுப் போட்டி

சிங்கம்புணரியில் வட்டார விளையாட்டுப் போட்டி

சிங்கம்புணரி : சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியங்களை உள்ளடக்கிய தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான வட்டார விளையாட்டுப் போட்டிகள் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது. முதலில் செஸ் போட்டி நடந்தது. சிங்கம்புணரி மற்றும் உலகம்பட்டி பள்ளிகளில் நடந்த போட்டியில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெறுபவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தலைமையில் பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத் தலைவர் செந்தில் துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ