மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
16 hour(s) ago
பயிற்சி முகாம்
16 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
16 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
16 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
16 hour(s) ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரிக்கு வரும் உப்பாற்றில் மதுரை மாவட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சட்ட விரோத தடுப்பை அதிகாரிகள் அகற்றினர்.திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் உருவாகும் உப்பாறு, நத்தம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து சிங்கம்புணரியில் பாலாற்றுடன் கலந்து அங்கிருந்து காளாப்பூர், முறையூர், திருப்புத்தூர் பெரிய கண்மாய் வரை செல்கிறது. இந்த ஆற்றில் மதுரை மாவட்ட பகுதியில் குறிப்பாக சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள சொக்கலிங்கபுரம் அருகே சிலர் மண்ணால் அணைகட்டி தண்ணீரை சொந்த உபயோகத்துக்கு திருப்பி வந்தனர். இதுகுறித்து சிங்கம்புணரி விவசாயிகள் மதுரை மாவட்ட நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் புகார் அளித்தனர். உப்பாற்றில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், சட்டவிரோத மண் தடுப்பை இயந்திரங்கள் மூலம் அகற்றி ஆற்றை சமப்படுத்தினர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago