மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
10 hour(s) ago
பயிற்சி முகாம்
10 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
10 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
10 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
10 hour(s) ago
திருப்புவனம்: திருப்புவனத்தில் கோடையில் நெல் பயிரிட்ட விவசாயிகளுக்காக தற்காலிக நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டுள்ளது.திருப்புவனத்தில் பம்ப்செட் வைத்துள்ள விவசாயிகள் கோடை காலத்திலும் நெல் பயிரிடுவது வழக்கம். இந்தாண்டு 300 ஏக்கரில் ஏ.டி.டீ., என்.எல்.ஆர்., மகாராஜா உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.கடும் கோடை வெயில் காரணமாக ஏக்கருக்கு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை செலவு அதிகரித்துள்ள நிலையில் நெல் பயிரிட்ட விவசாயிகள் அறுவடையை தொடங்கினர்.திருப்புவனத்தை மையமாக வைத்து தற்காலிக நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து நெல்முடிக்கரை கண்மாய் கரை அருகே 2ம் தேதி முதல் நெல் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது.விவசாயி பூவலிங்கம் கூறுகையில்: வழக்கமாக ஒரு போக சாகுபடி தான் நடைபெறும், கண்மாயில் தண்ணீர் இருந்ததால் இரண்டாம் போகமும் சாகுபடி செய்தோம், காலத்தில் பயிரிடும் போது வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்வதால் செலவு அதிகம் இருக்காது, ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆனால் இந்தாண்டு கடும் கோடை வெயில் காரணமாக செலவு அதிகரித்து விட்டன. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ளது, வியாபாரிகள் கிலோ 19 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். நெல் கொள்முதல் மையம் மூலம் அரசு கூடுதலாக கொள்முதல் செய்வதால் ஓரளவிற்கு லாபம் கிடைத்து வருகிறது, என்றார்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago