உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாலையோர இரும்பு தடுப்பு மாயம்

சாலையோர இரும்பு தடுப்பு மாயம்

சிவகங்கை : சிவகங்கை அருகே நெடுஞ்சாலை வளைவில் அமைக்கப்பட்டிருந்த இரும்புத்தடுப்பு காணாமல் போனதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை உள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை வளைவுகளில் சாலையோரம் வாகனங்கள் விபத்தை தடுக்க இரும்புத்தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன.சிவகங்கை அருகே சாத்தரசன்கோட்டை, மல்லல் இடையே உள்ள ஆபத்தான வளைவில் வாகனங்கள் பாதுகாப்புடன் செல்வதற்காக 500 மீட்டர் துாரம் அமைக்கப்பட்டிருந்த சாலையோர இரும்புத்தடுப்பு தற்போது மாயமாகி உள்ளது.நெடுஞ்சாலை துறையினர் சேதமடைந்த இரும்புத் தடுப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ