உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வு 

ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வு 

சிவகங்கை: சிவகங்கை அருகே பெருங்குடி தியாகராஜா மெட்ரிக் பள்ளியில் சாரண சாரணீய இயக்க மாணவர்களின் ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வு முகாம் நடந்தது.முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அருள் எட்வர்ட் வரவேற்றார். சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) வடிவேல், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாரிமுத்து, தனியார் பள்ளி பொன் விஜய சரவணக்குமார், நல்லாசிரியர் கண்ணப்பன், இயக்க தலைவர் புவனேஸ்வரன், பள்ளி நிறுவனர் தியாகராஜன் ஆகியோர் பேசினர். முதன்மை தேர்வாளர்கள் ராஜகோபால், சண்முக நாச்சியார், கிருஷ்ணன் முகாமை நடத்தினர். இதில் 63 சாரண மாணவர், 18 சாரணிய மாணவிகள் தேர்வு எழுதினர். சாரண செயலாளர் முத்துக்குமரன், அமைப்பு கமிஷனர்கள் நரசிம்மன், இந்திரா காந்தி, முத்துக்காமாட்சி, பொருளாளர் நாகராஜன் செய்திருந்தனர். ஆசிரியை ஆரோக்கிய அமுதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ